சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தை முருகதாஸ் ஆரம்பித்த நேரமே சரியில்லை. படம் ஆரம்பிக்கும் போதும் பிரச்சனை, வெளியிட்ட பிறகும் பிரச்சனை. மீஞ்சூர் கோபியை இன்நேரம் அனைவரும் மறந்தே போகியிருப்பார்கள். இந்த நேரத்தில் ஆந்திராவில் இருந்து கத்தி கதை என்னுடையது என்று ஒரு வீச்சியுள்ளார் நரசிம்மராவ்.
இவர் யார் என்று விசாரித்து பார்த்ததில், இவர் நண்பன் படத்தில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவராம். அப்போது விஜய்யிடம் கத்தி படத்தின் கதையை கூறியிருக்கிறாராம். கதையை கேட்ட விஜய் ஃபியூச்சர்ல முடிவெடுப்போம் என்று நம்பிக்கை தந்திருக்கிறார். விஜய்யிடம் கதை சொன்ன கையோடு, நரசிம்மராவ் நண்பன் பட சமயத்திலேயே ஆந்திராவிலிருக்கும் எழுத்தாளர் சங்கத்திலும், இயக்குனர் சங்கத்திலும் பதிவு செய்து வைத்துவிட்டார். தற்போது தன்னை ஏமாற்றியதாக விஜய் மீது புகார் கொடுத்திருக்கிறார் நரசிம்மராவ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி