புதுடெல்லி:-ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய அணி (117 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி (115 புள்ளிகள்) 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியது.
தென் ஆப்பிரிக்க அணி (114 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு சரிந்தது. ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்கும். தென் ஆப்பிரிக்க அணி எஞ்சிய 2 ஆட்டத்திலும் வெற்றி கண்டால், அந்த அணி ஆஸ்திரேலியாவை தாண்டி 2-வது இடத்தை பெறும். இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கும். பேட்ஸ்மேன் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் விராட்கோலி 2-வது இடத்திலும், கேப்டன் டோனி 7-வது இடத்திலும் தொடருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி