செய்திகள்,திரையுலகம் ‘லிங்கா’ தலைப்பு உண்மையில் யாருக்கு சொந்தம்!…

‘லிங்கா’ தலைப்பு உண்மையில் யாருக்கு சொந்தம்!…

‘லிங்கா’ தலைப்பு உண்மையில் யாருக்கு சொந்தம்!… post thumbnail image
சென்னை:-கோச்சடையான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க மனதளவில் தயாரானார் ரஜினி. அதன் பிறகே ரஜினிக்கு கதை சொல்லப்பட்டது. கதையைக் கேட்டதும் ரஜினிக்குப் பிடித்துப்போக, மளமளவென வேலைகள் தொடங்கின. படத்துக்கு லிங்கா என்று பெயர் சூட்டினார் ரஜினி. லிங்கா என்ற அந்தப் பெயர் கதைக்குப் பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ…தன் பேரனின் பெயர் என்பதால் லிங்காவை தன் படத்துக்கு பெயராக வைத்தார் ரஜினி.

லிங்கா என்ற தலைப்பை தனுஷ் தன் படத்துக்கு ரிசர்வ் செய்து வைத்திருந்ததாகவும், ரஜினிக்காக அந்த தலைப்பை விட்டுக்கொடுத்துவிட்டார் என்றும் லிங்கா படம் தொடங்கப்பட்ட நாளாக தனுஷ் பெயரும் அடிபட்டு வந்தது. இந்நிலையில் லிங்கா இசைவெளியீட்டுவிழாவில் லிங்கா தலைப்பை அமீர்தான் தனக்கு விட்டுக்கொடுத்தார் என்று சொன்னதோடு அவருக்கு நன்றியும் சொன்னார் கே.எஸ்.ரவிகுமார். உண்மை என்னவென்றால்…

ரஜினியின் லிங்கா பட தலைப்பு ஏற்கெனவே இயக்குநர் அமீரும், தனுஷும் சேர்ந்து நடிப்பதற்காக பதிவு செய்யப்பட்டு வைத்திருந்த தலைப்பு. பொன் குமரன் எழுதிய கதையில் ரஜினியை இயக்க கே.எஸ்.ரவிகுமார் திட்டமிட்டதும் அந்த கதைக்கு லிங்கா என்ற தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அந்த தலைப்பை தனக்கு விட்டுக் கொடுக்கும்படி அமீரிடம் கேட்டுள்ளார் கே.எஸ். ரவிகுமார்.ரஜினிக்காக லிங்கா தலைப்பைப் கேட்டதும் ஒரு பைசா கூட வாங்கிக் கொள்ளாமல் இலவசமாகவே பெருந்தன்மையோடு அந்த தலைப்பை விட்டுக்கொடுத்துவிட்டார் அமீர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி