சோச்சி:-நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் – விஸ்வநாதன் ஆனந்த் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்று வருகிறது. 12 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டியில் முதல் 8 சுற்று ஆட்டங்களில் கார்ல்சென் 2 ஆட்டத்திலும், ஆனந்த் 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தனர். 5 ஆட்டம் டிராவில் முடிந்தன.
9–வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. கார்ல்செனைவிட 1 புள்ளி பின்தங்கி இருக்கும் ஆனந்த் இந்த சுற்றில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியுடன் தனது ஆட்டத்தை தொடங்கினார். கறுப்பு நிற காய்களுடன் ஆடிய ஆனந்த் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு டிரா செய்தார். 9ம் சுற்று ஆட்டத்தின் முடிவில் கார்ல்சன் 5-4 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார். எனவே, இனி வரும் போட்டியில் ஆனந்த் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். கார்ல்சனைப் பொருத்தவரையில் உலக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு, இனி வரும் 3 போட்டிகளிலும் டிரா செய்தால் போதும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி