செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் 2014ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு இஸ்ரோ தேர்வு!…

2014ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு இஸ்ரோ தேர்வு!…

2014ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு இஸ்ரோ தேர்வு!… post thumbnail image
புதுடெல்லி:-உலக அளவில் அமைதியை ஏற்படுத்தும் பணிகளில் சிறந்த பங்களிப்பை அளிப்போருக்கு ஆண்டுதோறும் இந்திரா காந்தி அமைதி, ஆயுத ஒழிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2014-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி தலைமையிலான விருது தேர்வுக்குழு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விண்வெளித்துறையில் உலக அளவில் இந்தியா சிறந்து விளங்குவதற்கு, இஸ்ரோ நிறுவனம் தோளோடு தோள் நின்று செயலாற்றி வருகிறது. அதிநவீன தொழில்நுட்ப துறைகளில் முன்னேறிய நாடுகள், இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் திறமையாளர்களை எவ்வாறு சர்வதேச அளவில் பயன்படுத்த முடியும்? என்பதை இஸ்ரோ உலகுக்கு காட்டியுள்ளது. நாட்டில் ஊர்ப்புறம் மற்றும் தொலைதூரங்களில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதில் இஸ்ரோவின் பங்களிப்பு முக்கியமானது.

விண்வெளியை அமைதி வழியில் பயன்படுத்துவது தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தியதில் முக்கியமான பங்களிப்பு, செவ்வாய் ஆய்வில் உச்சபட்ச நிலை உள்ளிட்ட முனைப்பான சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்திரா காந்தி அமைதி, ஆயுத ஒழிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான விருது இஸ்ரோவுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி