சென்னை:-கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்துள்ள சயின்ஸ் பிக்ஷன் படமான இன்டர்ஸ்டெல்லர் படம், தமிழகத்தில் 20 தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்பட்டுள்ள போதிலும், திரையிட்ட முதல் வாரத்திலேயே, ரூ. 1.40 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மொழிமாற்றம் செய்யப்படாமல், நேரடி ஆங்கிலப் படமாகவே, இது தமிழகத்தில் திரையிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களில் அதிக ஆரம்ப வசூலைப் பெற்றுள்ள படம் என்ற பெருமையை இண்டர்ஸ்டெல்லர் படம் பெற்றுள்ளது. ஆங்கில படமாக இருந்த போதிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஒரு வாரம் கடந்த நிலையில், இப்படத்தை தமிழிலும் வெளியிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி