பாலிவுட் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த ஜீனத்துக்கு அவரது திருமண வாழ்க்கை சோகத்தையே ஏற்படுத்தியது. மஸார் கான் என்பவரை மணந்தார். இவர்களுக்கு அஸான், சஸான் என 2 மகன்கள் பிறந்தனர். கணவர் மற்றும் குடும்பத்தினர் செய்த கொடுமை தாங்காமல் மஸாரை விவாகரத்து செய்தார். 63 வயதாகும் ஜீனத் அமனுக்கு தற்போது திருமண ஆசை வந்துள்ளது. அவர் கூறும்போது,
மீண்டும் ஒருமுறை நான் வாழ்க்கையில் செட்டிலாக எண்ணுகிறேன். எனது மகன்கள் படித்து நல்லநிலையில் உள்ளனர். எனவே மீண்டும் புதுவாழ்க்கையை தொடங்க நினைக்கிறேன். எனக்கு ஏற்ற வாலிபர் கிடைத்தால் அவரை காதலித்து மணந்துகொள்ள தயாராக இருக்கிறேன் என்றார். 63 வயதாகும் ஜீனத்தை காதலித்து மணக்க எந்த வாலிபர் தயாராக இருக்கிறார் என்றுதான் தெரியவில்லை என பாலிவுட் ஹீரோயின்கள் கமென்ட் அடிக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி