இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், மிகவும் அழகான அற்புதமான ஸ்ரீதேவி அவர்களின் வருகையால் செட்டில் உள்ள அனைவருமே மயங்கிக் கிடக்கிறோம். அவருடைய நடிப்பைப் பார்க்கும் அனைவரையுமே அவர் ஈர்த்துக் கொள்வார். இளையதளபதியும், நானும் ஒன்றாக நடனமாடினோம். அப்படித்தான் எங்களது படப்பிடிப்பு ஆரம்பமானது. அது மிகவும் ஜாலியாக இருந்தது. அவருடைய உபசரிப்பு மிகவும் அருமை. அவர் ஒரு ஜென்டில்மேன், என ஸ்ரீதேவியையும், விஜய்யையும் புகழ்ந்து தள்ளியுள்ளார் சுதீப்.
விஜய்யைப் பற்றிய சுதீப்பின் இந்தப் புகழாராம் விஜய் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. லிங்கா பரபரபப்பையும் மீறி, சுதீப் விஜய்யைப் பற்றிக் குறிப்பிட்ட ஜென்டில்மேன், இளையதளபதி ஆகிய இரண்டு வார்த்தைகளும் லிங்கா டிரெண்டிங்கை பின்னுக்குத் தள்ளி விட்டு இந்திய அளவில் டிரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி