இன்னொரு புறம் வசூல் வேட்டையும் நடத்தவும் தவறவில்லை. படம் வெளியான முதல் 12 நாட்களிலேயே ரூ 100 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. இதை படத்தின் இயக்குனர் முருகதாஸே தெரிவித்திருந்தார். சமீபத்தில் மேலும் 10 கோடி வசூலித்து 120 கோடியை தாண்டியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அப்படத்தில் நடித்த நடிகர் சதீஸ் கத்தி வசூல் குறித்து இரண்டு தினங்களுக்கு முன் ஒரு டுவிட் செய்துள்ளார். இது விஜய் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதில், கத்தி ஓவர்சிஸ் அனைத்தும் சேர்த்து ரூ 160 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ 200 கோடியை தொட வாழ்த்துக்கள் என டுவிட் செய்துள்ளார். கத்தி திரைப்படம் தான் இந்த வருடத்தில் ரூ 100 கோடியை தாண்டிய முதல் படம். இதற்கு முன்பு இதே முருகதாஸ்-விஜய் கூட்டணியில் வெளிவந்த துப்பாக்கி படமும் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி