ஆனால் அவரோ நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று இருந்தார். அதன்படி மீண்டும் யுவராஜ் இயக்கத்தில், இப்போது ஒருபடத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு எலி என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹீரோவாக மட்டும் நடிப்பேன் என்று கூறி வந்தவர் இப்போது காமெடியனாகவும் களம் இறங்கியுள்ளார்.
இயக்குநர் எழிலிடம் உதவியாளராக இருந்த குமாரய்யா என்பவர், விக்ரம் பிரபுவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்தில் வடிவேலுவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குமாரய்யா சொன்ன கதை பிடித்துப்போக இப்படத்தில் காமெடியனாக நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறாராம் வடிவேலு. ஆக, வடிவேலு மீண்டும் காமெடி பாதைக்கு திரும்பியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி