லண்டன்:-இங்கிலாந்தில் உள்ள மேற்கு யோக்சயர் என்ற இடத்தை சேர்ந்தவர்கள் கெல்லி–டேவிட் டெய்லர் தம்பதி. இவர்களுக்கு 5 வயது மகன் இருக்கிறான். இவனை பள்ளியில் சேர்ப்பதற்காக வீட்டு பக்கத்தில் உள்ள பள்ளிகளுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் இடம் கிடைக்கவில்லை. வெகு தூரத்தில் உள்ள பள்ளியில் தான் இடம் கிடைத்தது. எனவே அந்த பள்ளியில் சேர்த்தனர்.
அங்கு செல்வதற்கு போதிய வாகன வசதிகள் இல்லை. இதனால் அந்த சிறுவன் தினமும் 12 பஸ் ஏறி அந்த பள்ளிக்கு சென்று வருகிறான். இதனால் அவன் மிகவும் சிரமப்படுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். எனவே தங்கள் வீட்டருகே உள்ள பள்ளியில் அவனுக்கு இடம் தர வேண்டும் என்று மீண்டும் விண்ணப்பித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி