இதனால் கோவில் நடை திறப்பு நேரம் நேற்று அதிகரிக்கவில்லை. கடந்த 2 நாட்களாக காலை 4 மணிக்கு பதிலாக அதிகாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டது. நேற்று காலை 4 மணிக்கு வழக்கம் போல நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.மேலும் நெருக்கடி இல்லாமல் திருப்தியாக சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ததாக பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.நேற்று தமிழக மற்றும் ஆந்திர மாநில அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகளவில் சபரிமலையில் காணப்பட்டது.கேரள மந்திரிகள் ரமேஷ் சென்னிதலா, சிவக்குமார் ஆகியோர் நேற்று சபரிமலைக்கு சென்று பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்தனர்.பம்பை மற்றும் சன்னிதானம் பகுதிகளில் அவர்கள் ஆய்வு நடத்தினார்கள். நேற்று சபரிமலையில் மழை பெய்ததால் பக்தர்களுக்கு தேவசம் போர்டு ஊழியர்களும் அய்யப்ப பக்தர்கள் சேவா சங்கத்தினரும் தேவையான உதவிகளை செய்தனர்.
சபரிமலையில் பக்தர்கள் செல்லும் காட்டு பாதையான எரிமேலி, அழுதா, காளகட்டி, கரிமலை போன்ற பகுதிகளில் புலிகள் மற்றும் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. சில பக்தர்களும் புலி நடமாட்டத்தை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.எனவே காட்டு பாதை வழியாக பக்தர்கள் செல்வதை தவிர்க்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.கர்நாடகாவைச் சேர்ந்த 9 பக்தர்கள் ஒரு காரில் சபரிமலைக்கு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். பத்தினம்திட்டா களத்தூர் பகுதியில் ஒரு வளைவில் அவர்களின் கார் திரும்பியபோது, நிலை தடுமாறி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த பொது மக்கள் மீது மோதியது. இதில் ராமச்சந்திரன் (வயது 61), உமைவா பீவி (41) ஆகிய 2 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் உடனடியாக விரைந்து சென்று பிரச்சினை ஏற்படாமல் தடுத்தனர். இந்த விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி