செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை அம்பலப்படுத்த தயார்: பிரான்சின் ஹெர்வ் பல்சியேனி தகவல்!…

கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை அம்பலப்படுத்த தயார்: பிரான்சின் ஹெர்வ் பல்சியேனி தகவல்!…

கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை அம்பலப்படுத்த தயார்: பிரான்சின் ஹெர்வ் பல்சியேனி தகவல்!… post thumbnail image
பாரிஸ்:-பிரான்சில் வசித்து வரும் ஹெர்வ் பல்சியேனி என்பவர் வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் பற்றிய விவரங்களை அளிக்க தயார் என கூறியுள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

இந்தியாவிடம் தற்போது 1 சதவிகித அளவுக்கு மட்டுமே கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய தகவல் உள்ளது. ஆனால் இன்னும் ஏராளமான கறுப்பு பணம் பதுக்கிய நபர்கள் பற்றிய விவரங்கள் வெளிவராமல் உள்ளன. கடந்த 2011ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலுள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டது. அது பனிப்பாறையின் முனையளவு தகவல் தான்.

200 ஜி.பி. தகவல்களில் 2 எம்.பி. தகவல்கள் மட்டுமே இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்தியா நாளை மீதமுள்ள தகவல்களை கேட்டுமானால் நாளையே அத்தகவல்களை அனுப்ப தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி