முனி, காஞ்சனா படங்களை அடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘முனி 3 – கங்கா’. லாரன்ஸ், டாப்ஸி, கோவைசரளா, தேவதர்ஷினி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயை நெருங்கி உள்ளன.
பத்திரிகை நிருபர்களான லாரன்ஸ் மற்றும் டாப்ஸி இருவரும் ஒரு பெண்ணின் மரணத்தைக் குறித்து விவரங்கள் சேகரிக்கின்ரனர். அப்போது டாப்ஸிக்கு பேய் பிடித்து விடுகிறது. பிறகு டாப்ஸியின் உடலில் இருந்து கொண்டு பேய் சொல்லும்படி லாரன்ஸ் உள்ளிட்ட டீம் செயல்பட்டு வில்லனைக் கண்டுபடிப்பதுதான் கதையாம். டாப்ஸி உடல் முழுக்க கருப்பு வண்ணத்தில் பேயாக நடிக்க வேண்டும். அதில் டாப்ஸிக்குப் பதில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் கலைவாணி நடித்திருக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி