சென்னை :-தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் இசையில் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவரும் வகையில் பாடல்கள் அமைந்த படம் அனேகன். ஆனால், இப்படத்தின் பாடல்கள் எல்லாம் எங்கோ கேட்டது போல் உள்ளது என ரசிகர்கள் சொல்ல, அதை தொடர்ந்து அவரை கிண்டல் செய்து பல மீம்கள் வர ஆரம்பித்து விட்டது.
அதிலும் குறிப்பாக பவதாரணி பாடிய பாடல் ஒன்று அப்படியே மரியான் படத்தில் இடம்பெற்ற ‘இன்னும் கொஞ்ச நேரம்’ பாடல் போல் உள்ளது என்று கலாய்த்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி