மும்பை:-இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் இந்த ஆண்டுக்கான சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்திய முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் பெறுகிறார். 58 வயதான வெங்சர்க்கார் 1976ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடியவர். 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்தவர். 116 டெஸ்டுகளில் பங்கேற்று 17 சதம் உள்பட 6,868 ரன்கள் சேர்த்துள்ளார். அவருக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழுடன் ரூ.25 லட்சம் ரொக்கமும் வழங்கப்படும்.
இந்தியாவின் முதல் டெஸ்ட் கேப்டனான சி.கே.நாயுடு பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது 1994-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கபில்தேவ் இந்த விருதை வாங்கியது குறிப்பிடத்தக்கது. 2013-14-ம் ஆண்டு சீசனில் இந்தியாவின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி