ஜெட்டா:-‘வாட்ஸ்அப்’ மூலம் தான் அனுப்பிய செய்தியை புறக்கணித்த பெண்ணை அவரது கணவர் விவாகரத்து செய்த தகவல் சவுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் இந்த புறக்கணிப்பை தனது விவாகரத்துக்கு காரணமாக குறிப்பிட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த கணவர், ‘தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் ‘ஸ்மார்ட் போனில்’ பேசிக்கொண்டிருப்பது, அவர்களுடன் ‘சாட்’டில் அரட்டை அடிப்பது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்த என் மனைவி, ‘வாட்ஸ்அப்’ மூலம் நான் அனுப்பிய தகவல்களை கவனிக்கவோ, அவற்றுக்கு பதில் அளிக்கவோ நேரம் ஒதுக்கவில்லை’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.
‘வாட்ஸ்அப்’-பில் அவர் தகவல் அனுப்பியதே எனக்கு தெரியாது என்று கூறிய மனைவியின் விளக்கத்தையும் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். அவள் உபயோகிக்கும் ஸ்மார்ட் போனில் ‘வாட்ஸ்அப்’-பில் புதிய தகவல் வந்துள்ளதை சுட்டிக்காட்டும் ‘அப்டேட்ஸ்’ மென்பொருளும் உள்ளதால், நான் அனுப்பிய தகவலை படிக்கவே இல்லை என்று கூறும் அவளது நியாயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி முடிவாக விவாகரத்தும் செய்து விட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி