செய்திகள்,திரையுலகம் ரோபாட் 2 படத்தில் நடிகர் அமிர் கான்!…

ரோபாட் 2 படத்தில் நடிகர் அமிர் கான்!…

ரோபாட் 2 படத்தில் நடிகர் அமிர் கான்!… post thumbnail image
மும்பை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் ரோபாட் 2 படத்தில், அமிர் கான் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோபாட் படம் என்பது, திரையுலக கலைஞர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த திரை உலகத்தையே மிகுந்த எதிர்பார்ப்பிற்குள்ளாக்கியுள்ளது.

சில தினங்களுககு முன்னர், ரோபாட் 2 படத்தின் முக்கிய வேடங்களில், அமிதாப் பச்சன் மற்றும் ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படி தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி்க்கொண்டிருக்கும் நிலையில், ரோபாட்-2 படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், இப்படத்தில் நடிக்க தான் ஷங்கரை அணுகினால், ஷங்கர் மறுப்பு தெரிவிக்க மாட்டார் என்றதனடிப்படையில் ஆமிர் கான் கூறியிருந்தார்.

இதனையடுத்து, ரோபாட்-2 படத்தில், ஆமிர் கான் நடிக்க இருப்பது உறுதியா அல்லது இல்லை வேறு யாராவது நடிக்கப்போகிறாரா என்பது, படம் குறித்து இயக்குனர் ஷங்கர் கூறும் போதுதான் இவ்விவகாரம் முற்றுப்பெறும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி