தமிழ் பட உலகைப்போல் தெலுங்கு பட உலகிலும் திரிஷா முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவருக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் காதல் இருந்து வந்ததாகவும், பின்னர் அந்த காதல் முறிந்து போனதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.இந்நிலையில், திரிஷாவுக்கு திடீர் என்று திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
மணமகன் பெயர், வருண் மணியன். சென்னையை சேர்ந்த தொழில் அதிபர். இவர், வாயை மூடி பேசவும் என்ற படத்தை தயாரித்து இருக்கிறார். காவியத்தலைவன் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.திரிஷா-வருண் மணியன் நிச்சயதார்த்தம், சென்னை செனடாப் சாலையில் உள்ள திரிஷா வீட்டில் நடந்தது. அப்போது மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். திரிஷா- வருண் மணியன் திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி