கடந்த இரண்டு வாரங்களில் படத்தின் வசூல் மேலும் ஒரு பத்து கோடியைப் பெற்றிருக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துவாக, தற்போது வரும் திரைப்படங்கள் நான்கு வாரங்களைத்தாண்டி ஓடுவது என்பது எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது. ஆனால், கத்தி படம் நான்காவதுவாரத்தைக் கடக்க உள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் இன்னமும் 30 திரையரங்குகளுக்கும் மேல் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ்ப்படங்களைப் பொறுத்தவரையில் இதுவரையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மட்டுமே 100 கோடிகிளப்பில் இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து ரஜினிகாந்த் நடித்து வெளிவரும் லிங்கா, கமல்ஹாசன் நடித்து வெளிவரும் உத்தமவில்லன், அஜித் நடித்து வெளிவரும் என்னை அறிந்தால் ஆகியபடங்கள் அந்தக்கிளப்பில் இணையுமா என்பதே அவரவர் ரசிகர்களின் மிகப்பெரும் ஆவலாக உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி