சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களாக நம்பர் 1 என்ற இடத்திலேயே இருக்கிறார். இவர் தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாக கூறப்பட்டது.
சில நாட்களுக்கு முன் அவர்களுக்கு ஏதோ சண்டை பிரிந்துவிட்டார்கள் என்று பலர் கூறினர். தமிழ் நாட்டின் முன்னணி நாளிதழ் ஒன்றில் த்ரிஷா திருமண செய்தி பரவி வருகிறது. இதில் குறிப்பிடுகையில், யாருக்கும் தெரியாமல் திரிஷாவுக்கு திடீர் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மணமகன் பெயர், வருண் மணியன், இவர் சென்னையை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபர்.
சென்னை செனடாப் சாலையில் உள்ள திரிஷா வீட்டில் நடந்தது. அப்போது மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். திரிஷா-வருண் மணியன் திருமண தேதி முடிவாகவில்லை என்று கூறியுள்ளனர். உண்மை எது என்பதை திரிஷாவே சொன்னால் தான் தெரியும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி