இதையடுத்து சானியா மிர்சா குடும்பத்தினரை மீடியாக்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு அது பற்றிய விளக்கத்தைக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா, சானியா மிர்சா ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் உண்மையல்ல என்று தெரிவித்திருக்கிறார். சானியா ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடிக்கவில்லை. ஜேம்ஸ்பாண்ட் பற்றிய ஒரு டிவி நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில்தான் அவர் நடித்தார் என அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார்.
அப்படியிருக்க, சானியா மிர்சா ஏதோ ஒரு படத்தில் நடிப்பது போல பரபரப்பான விதத்தில் அப்படி ஒரு தகவலை டுவிட்டரில் பதிவிட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வரித் தகவலைப் போடுவதில் கூட இவ்வளவு சஸ்பென்ஸ் வைத்தா சானியா அப்படி ஒரு பதிவைப் போடுவார் என கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி