செய்திகள்,முதன்மை செய்திகள் கிருஷ்ணருக்கு உலகிலேயே மிகப்பெரிய கோவில்: மதுரா அருகே கட்டப்படுகிறது!…

கிருஷ்ணருக்கு உலகிலேயே மிகப்பெரிய கோவில்: மதுரா அருகே கட்டப்படுகிறது!…

கிருஷ்ணருக்கு உலகிலேயே மிகப்பெரிய கோவில்: மதுரா அருகே கட்டப்படுகிறது!… post thumbnail image
பிருந்தாவன்:-பெங்களூரைச் சேர்ந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினரான ‘இஸ்கான்’ அமைப்பினர் உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே பிருந்தாவனத்தில் கிருஷ்ண பகவானுக்காக மிகப்பெரிய கோவிலை ரூ.300 கோடி செலவில் கட்ட முடிவு செய்து உள்ளனர். ‘பிருந்தாவன் சந்திரோதய மந்திர்’ என்று அழைக்கப்படும் இந்த கோவிலின் உயரம் 700 அடியாக இருக்கும்.

கோவில் கட்டி முடிக்கப்படும் போது இது உலகில் உள்ள எல்லா கோவில்களையும் விட மிக உயரமானதாக இருக்கும். இந்த கோவிலின் அடிக்கல் நாட்டு விழா கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி நடந்தது. மேலும் நேற்று கோவிலில் நடந்த அனந்த சேஷ ஸ்தாபன பூஜையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கிவைத்தார்.மகாபாரத இதிகாசத்தின்படி பிருந்தாவனத்தில் கிருஷ்ண பகவான் எவ்வாறு வசித்தாரோ அதுபோன்ற சூழல் உணர்வை ஏற்படுத்தும் விதமாக 26 ஏக்கர் நிலப்பரப்பில் 70 அடுக்குமாடிகளைக் கொண்டதாக இந்த கோவிலை கட்டுவதற்கு இஸ்கான் அமைப்பினர் தீர்மானித்து உள்ளனர். கோவிலின் 700 அடி உயரத்திற்கு மேலே சென்று பார்க்கும் விதமாக கூண்டு வடிவ மின்தூக்கி வசதியையும் அமைக்க இருக்கிறார்கள்.மேலும், வேத கால இலக்கியத்தில் எவ்வாறு பல்வேறு கிரகங்களின் இயக்கநிலை இருந்ததோ அதே போன்ற உணர்வை பிரதிபலிக்கும் வகையில், கோவிலில் முப்பரிமாண ஒலி மற்றும் ஒளி அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று கோவிலின் திட்ட அமைப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில்,

இந்த கோவிலில் ‘கிருஷ்ண லீலா’ என்ற பெயரில் பூங்கா ஒன்றும் அமைக்கப்படுகிறது. இங்கே இசை நீரூற்று, புல்வெளித் தோட்டம், யமுனா படகு சவாரி, பாரம்பரிய கிராமம், பசுக்களை பராமரிக்கும் கோசாலை, பாரம்பரிய அருங்காட்சியகம், பகவத் கீதை கண்காட்சி ஆகியவற்றையும் பார்க்கலாம். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பிருந்தாவன் கோவில் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தனர்.கோவிலின் விசேஷ பூஜையை நேற்று தொடங்கி வைத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுகையில், ஆன்மிக நெறிமுறைகளை இந்த உலகிற்கு தெரிவிக்கும் புகழ் பெற்ற மையமாக இந்த பிருந்தாவன் கோவில் திகழும் என்பதில் சந்தேகமில்லை.இந்த கோவிலை மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் ஆன்மிக சுற்றுலா மையமாக திகழ்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச கவர்னர் ராம்நாயக், முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், எம்.பி.க்கள் ஹேமமாலினி, ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி