ராணி ருத்ரமா தேவி கதையை 2002ல் தயார் செய்தேன். ராணி வேடத்தில் நடிக்க நடிகை தேடினேன். யாரும் பொருத்தமாக இல்லை. அப்போதுதான் அருந்ததி படம் வந்தது. அதில் அனுஷ்கா நடிப்பு பிரமிக்க வைத்தது. அபாரமாக நடித்து இருந்தார். ருத்ரமாதேவி ராணி வேடத்துக்கு நடிகை கிடைத்து விட்டார் என்று சந்தோஷப்பட்டேன். படவேலைகளை உடனடியாக துவக்கினேன்.
அனுஷ்கா கடும் உடற்பயிற்சிகள் எடுத்து இந்த படத்தில் நடித்து வருகிறார். ராணி கேரக்டருக்கு ஏற்றவாறு தன்னை தயார் படுத்திக் கொண்டார். எடையை கூட்டியும் குறைத்தும் கஷ்டப்பட்டு நடிக்கிறார்.சினிமாவில் கதை, பணம் இருந்தாலும் கேரக்டருக்கு பொருத்தமானவர்கள் அமைந்தால்தான் படம் சிறப்பாக வரும்.கிளைமாக்ஸ் காட்சியில் வாள் சண்டை போட்டு நடித்தார். அப்போது கையில் காயம் ஏற்பட்டது. அதை பொருட்படுத்தாமல் நடித்தார். 150 அடி உயர கிரேனில் தொங்கியபடி சண்டை போட்டார். இந்த சண்டை காட்சியை மட்டும் ரூ. 7 கோடி செலவில் படமாக்கி உள்ளோம். இவ்வாறு டைரக்டர் குணசேகரன் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி