இதன் படப்பிடிப்பு கர்நாடகா, ஆந்திரா மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வெளிநாட்டுக்கு சென்று பாடல் காட்சியையும் படமாக்கிவிட்டு திரும்ப உள்ளனர். அடுத்த மாதம் டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்த நாளையொட்டி லிங்கா படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக டப்பிங், ரீரிக்கார்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.
லிங்கா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நாளை காலை சத்யம் தியேட்டரில் நடக்கிறது. இதில் ரஜினி பங்கேற்கிறார். அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் போன்றோரும் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இவ்விழாவில் லிங்கா படத்தின் டிரெய்லரும் வெளியிடப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி