சென்னை:-மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஹாலிவுட் படம் எக்ஸ்சோடஸ் காட்ஸ் அண்ட் கிங்ஸ். மோசேயின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. மோசேவும், ராம்சேசும் நண்பர்கள். இதில் ராம்சே எகிப்தியர்களை அடிமைகளாக்கி நான்தான் கடவுள் என்று அறிவிக்க அவனிடமிருந்து மோசே எப்படி அடிமைகளை மீட்டு ஆண்டவனின் குழந்தைகளாக்குகிறார் என்பதுதான் கதை.
கிராபிக்ஸ், அனிமேஷன் மிரட்டல்களுடன் பல நூறு கோடி செலவில் தயாரித்துள்ளது டுவெண்டித் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம். ரிட்லி ஸ்காட் இயக்கி உள்ளார். கிறிஸ்டியன் பாலே மோசேவாக நடித்துள்ளார். ஜோயல் எட்கர்டன், பென் கிங்ஸ்லி ஆகியோரும் நடிதுள்ளனர். வருகிற டிசம்பர் 12ம் தேதி வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ரிலீசாகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி