சென்னை:-‘அனேகன்’ திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. அதிலும் குறிப்பாக டங்காமாரி என்ற பாடல் புதுவிதமான பேட்டை சாங்காக எல்லோரையும் கவர்ந்துள்ளது. இப்பாடலை கேட்ட பலருக்கும் டங்காமாரி என்றால் என்ன? என்று குழம்பி வந்தனர்.
ஒருவேளை வழக்கம் போல் ஹாரிஸ் ஜெயராஜ் புரியாத வார்த்தையை ஏதும் பயன்படுத்துயுள்ளாரா… என சிலர் கேள்வி எழுப்பினர். தனுஷிற்கு கூட என்ன அர்த்தம் என்று தெரியாத நிலையில் பாடலாசிரியர் ரோகேஷிடம் கேட்டு அறிந்து கொண்டாராம். டங்காமாரி என்றால் மாத்தி மாத்தி பேசுபவர்களை அப்படி தான் குறிப்பிடுவார்கள் என்று கூறி தெளிவுப்படுத்தினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி