சென்னை:-சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு பட விழாவில் பேசிய நடிகை சமந்தா, படம் ஓடாவிட்டால் அதில் நடித்தவர்களை குறை சொல்லக்கூடாது. அந்த கதையையும், இயக்குனரையும் தேர்வு செய்த தயாரிப்பாளர் மீதுதான் தவறு. தோல்விக்கு அவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார்.
இவரது பேச்சு தயாரிப்பாளர்களை கோபப்படுத்தி உள்ளது. சமீபத்தில் மகேஷ்பாபு-சமந்தா இணைந்து நடித்த ஒரு படம் தோல்வி அடைந்ததையடுத்து அப்பட தயாரிப்பாளர் மகேஷ்பாபுவிடம் நஷ்ட ஈடு கேட்டுக்கொண்டிருக்கிறார். இதை மனதில் வைத்தே சமந்தா இப்படி பேசியிருப்பதாகவும் மகேஷ்பாபு படத்தில் வாய்ப்பு பிடிக்க அவர் இப்படி கருத்து சொல்லியிருப்பதாகவும் டோலிவுட்டில் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி