செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இந்தியர்களுக்கு மட்டுமே எட்டிய இரட்டை சதம்!…

இந்தியர்களுக்கு மட்டுமே எட்டிய இரட்டை சதம்!…

இந்தியர்களுக்கு மட்டுமே எட்டிய இரட்டை சதம்!… post thumbnail image
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் ஒரு காலத்தில் முடியவே முடியாது என்று வாதிடப்பட்ட இரட்டை சதம், ஜெட் வேகத்தில் ஆடக்கூடிய 20 ஓவர் கிரிக்கெட்டின் வருகைக்கு பிறகு அடுத்தடுத்து கனியத் தொடங்கி விட்டது. அதுவும் இந்தியர்களுக்கு மட்டுமே சாத்தியமாகி வருவது ஆச்சரியத்திற்குரிய உண்மையாகும். ஒரு நாள் போட்டி 1971-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. நேற்றுடன் சேர்த்து இதுவரை 3544 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன.

முதல் முறையாக 2010-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் தெண்டுல்கர் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். அதைத் தொடர்ந்து ஷேவாக் (219 ரன்), ரோகித் சர்மா(209), மறுபடியும் இப்போது ரோகித் சர்மா (264 ரன்) என்று இரட்டை சதம் 4-வது முறையாக கிரிக்கெட் ஏட்டில் பதிவாகி விட்டது.
இந்த 4 இரட்டை செஞ்சுரியும் இந்திய மண்ணிலேயே எடுக்கப்பட்டுள்ளன. மூன்று பேரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி அசத்தியவர்கள் ஆவர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி