செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் 2021ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை இந்தியா அனுப்பும்: இஸ்ரோ தலைவர் தகவல்!…

2021ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை இந்தியா அனுப்பும்: இஸ்ரோ தலைவர் தகவல்!…

2021ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை இந்தியா அனுப்பும்: இஸ்ரோ தலைவர் தகவல்!… post thumbnail image
புதுடெல்லி:-இந்திய விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்த மங்கள்யான் விண்கலம் அதன் சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. எதிர்பார்த்ததை விட இன்னும் ஒரிரு ஆண்டுகள் ஆயுளுடன் மங்கள்யான் விண்கலம் செயல்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்திய விஞ்ஞானிகளின் இன்னொரு நீண்ட வேட்கையாக இருப்பது விண்வெளிக்கு மனிதனை அனுப்பி வைக்கும் திட்டமாகும். இதுவும் நிறைவேற வாய்ப்பு தற்போது உருவாகி இருக்கிறது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-இப்போதிலிருந்து அடுத்த 7 ஆண்டுகளில், அதாவது 2021-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பி வைக்கும் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும். இந்த விண்வெளி பயணத்துக்குத் தேவையான வடிவமைப்பு, மேம்பாட்டு முயற்சிகளை இஸ்ரோ உருவாக்கி இருக்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.- மிமிமி ராக்கெட் ஏவப்பட்ட அடுத்த சில நாட்களில் விண்வெளிக்கு 3 வீரர்கள் பயணம் செய்யக் கூடிய முன்மாதிரி கூடு வடிவத்தை இஸ்ரோ பரிசோதனை செய்து பார்க்கும்.மேலும், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கக் கூடிய ‘மார்சியன் லேண்டர்’ என்னும் சாதனத்தின் வடிவமைப்பை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. விரைவில் அதனை தயாரிக்கும் நிலைக்கு நாங்கள் வருவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி