சென்னை:-‘கத்தி’ வெற்றியைத் தொடர்ந்து விஜய் அடுத்து சிம்பு தேவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் 59வது படத்தை அட்லி இயக்கப் போவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. ஆக்ஷன் ப்ளஸ் ரொமாண்டிக் படமாக இது உருவாக போகுதாம்.
அதுமட்டுமல்லாமல் படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காகவே மூன்று மாபெரும் தயாரிப்பு நிறுவனம் ஒன்று கூடுகிறார்களாம். கலைபுலி தாணு, தி நெக்ஸ்ட் பிக் ரிலீஸ் மற்றும் விஜய் டிவி மகேந்திரன் ஆகியோர் சேர்ந்து தயாரிக்க உள்ளனர். மேலும் படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறாராம். ஏற்கெனவே, நயன்தாரா, வில்லு படத்தில் விஜய் ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி