சென்னை:-நடிகை திரிஷா கடந்த சில நாட்களாக பிசியாக நடித்து வந்தார். இரவு பகல் படப்பிடிப்புகள் நடந்ததால் சோர்வடைந்தார். காய்ச்சலும் ஏற்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்க முடியவில்லை. டாக்டரை சந்தித்து காய்ச்சலுக்கு மருந்து மாத்திரை எடுத்து கொண்டார்.
தற்போது மருத்துவர் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த 10 நாட்களாக படுக்கையிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். திரிஷா தற்போது அஜீத்துடன் ‘என்னை அறிந்தால்’, ஜெயம் ரவியுடன் ‘அப்பாடக்கர்’ மற்றும் மணிமாறன் டைரக்டு செய்யும் பெயரிடப்படாத படம் போன்றவற்றில் நடிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி