சென்னை:-நடிகர் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்‘ படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படம் பற்றி இயக்குனர் கே.வி. ஆனந்த் கூறும்போது, முதலில் இந்த கதையை விஜய்யிடம்தான் கூறினேன். அவருக்கு பிடித்திருந்தது. இதற்கிடையில் ‘ஜில்லா’, ‘கத்தி’ என 2 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். அவருக்காக காத்திருந்தால் படம் தொடங்குவதற்கே ஒன்றரை வருடத்துக்குமேல் ஆகிவிடும் நிலை இருந்தது.
பிறகு அவரே, இந்த கதைக்கு தனுஷ் பொருத்தமாக இருப்பார் என்று யோசனை சொன்னார். அவர் சொன்னது சரியாகப்பட்டது. தனுஷிடம் கதை சொன்னேன். ஒப்புக்கொண்டார். இது முழுக்க காதல் பின்னணியில் அமைந்த படம். 4 மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி