சென்னை:-மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளையில் இன்று ‘லிங்கா’ படத்திற்கு தடை கோரி இயக்குனர் ரவிரத்னம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘லிங்கா’ படத்தின் கதையும், நான் கடந்த 2013ம் ஆண்டு இயக்கிய ‘முல்லை வனம் 999’ படத்தின் கதையும் ஒன்றாக உள்ளதாக அறிகிறேன்.
எனவே ரஜினிகாந்த நடிப்பில் உருவாகிவுரும் லிங்கா படத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். லிங்கா படத்தை ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி