சென்னை:-தவமாய் தவமிருந்து, பட்டியல், சத்தம் போடாதே போன்ற பல தமிழ் படங்களிலும், நிறைய மலையாள படங்களிலும் நடித்திருப்பவர் நடிகை பத்மபிரியா. இவருக்கு இன்று மும்பையில் சொந்த பந்தங்கள் மத்தியில் மிகவும் எளிமையான முறையில் ஜாஸ்மின் என்பவரோடு திருமணம் நடைபெற இருக்கிறதாம்.
ஆராய்ச்சிப் படிப்பிற்காக நியூயார்க் சென்றிருந்த நடிகை பத்மப்ரியா அங்கே ஜாஸ்மினுடன் ஏற்பட்ட சந்திப்பில் அவருடன் காதல் வயப்பட்டதாகக் கூறப்படுகிறது. மெக்கானிக்கல் இன்ஜியரிங் படித்துள்ள பத்மப்ரியாவின் காதலர் ஜாஸ்மின் தற்போது அரசுத்துறை ஒன்றில் பணியாற்றி வருவதாகக் கூறுகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி