சென்னை:-‘கத்தி’யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், படத்தை பற்றிய சுவாரஸ்மான செய்தி ஒன்று தற்போது வெளிவந்திருக்கிறது. ‘கத்தி’ படத்தை தொடர்ந்து விஜய் இப்படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய்.
தற்போது இப்படத்திற்காக சென்னை ஈசிஆர் ரோட்டில் பிரம்மாண்ட அரண்மனை செட் ஒன்று போடப்பட்டு வருகிறதாம். மேலும், படத்திற்கு ‘மாரீசன்’ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி