செய்திகள்,திரையுலகம் எனக்கு எந்தப் பட்டமும் தேவையில்லை: நடிகர் விஜய் அதிரடி!…

எனக்கு எந்தப் பட்டமும் தேவையில்லை: நடிகர் விஜய் அதிரடி!…

எனக்கு எந்தப் பட்டமும் தேவையில்லை: நடிகர் விஜய் அதிரடி!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் டுவிட்டர் இணைய தளம் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது கேட்கப்பட்ட சில கேள்விகளும், அவற்றிற்கு விஜய் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி: புதுமுக இயக்குனர்களுக்கு நீங்கள் ஏன் வாய்ப்பளிப்பதில்லை?

பதில்: இதுவரை நான் நடித்த 58 படங்களில் 28 படங்கள் புதுமுக இயக்குனர்கள் தான். ஓகேவாண்ணா..

கேள்வி : சமீபத்தில் உங்கள் மனம் கவர்ந்த படம் எது?

பதில் : ஜிகர்தண்டா, த்ரிஷ்யம்(மலையாளம்)

கேள்வி : உங்கள் ரசிகர்கள் பற்றி கூறுங்கள்?

பதில் : வெற்றியில் என்னிடம் ஒட்டிக் கொண்டவர்கள் அல்ல, தோல்வியில் என்னை தட்டிக் கொடுத்தவர்கள் என் ரசிகர்கள்… நடிகன், ரசிகன் தாண்டிய உறவு எங்களூடையது…

கேள்வி: உங்களது ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: உழைத்திடு.. உயர்ந்திடு.. உன்னால் முடியும்.

கேள்வி: உங்களுக்கு இளைய தளபதி பட்டம் பிடிக்குமா? சூப்பர் ஸ்டார் பட்டம் பிடிக்குமா?

பதில்: உங்கள் அன்பு மட்டும் போதும், எந்த பட்டமும் வேண்டாம்.

அனிருத் கேள்வி: நான் உங்களை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். பதிலுக்கு விஜய் ஹ..ஹ..ஹ.. நானும் உங்களை மிஸ் பண்றேன் என்று டுவீட் செய்தார்.

இவ்வாறு விஜய் அதில் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி