தற்போதைய சினிமாவில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இதனால் தான் நான் படங்களில் நடிப்பதில்லை என கூறி இருந்தார்.மூத்த நடிகையான ஜெயா பச்சன் தனது இந்த கருத்தை ஷாருக்கானிடமே நேரடியாக கூறி உள்ளாராம். இருப்பினும் அதோடு விடாமல் பொது நிகழ்ச்சியில் பேசுகையிலும் தனது இந்த கருத்தை கூறியது, ஹேப்பி நியூ இயர் படக்குழுவினரை அதிருப்தியிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி விட்டதாம். தனது மனைவி ஜெயா பச்சனின் இந்த பேச்சுக்காக ஷாருக்கானிடம் மன்னிப்பு கேட்டு எஸ்.எம்.எஸ்., அனுப்பி உள்ளாராம் அமிதாப் பச்சன்.
அதில், ஜெயா பச்சன் உங்களையோ அல்லது உங்கள் படத்தையோ அவமதிப்பதற்காக அப்படி பேசவில்லை. அவரது மகன் அபிஷேக்கிற்கு இந்த படத்திற்கு பின் பெரிய அளவில் பாராட்டு கிடைக்கும் என நினைத்திருந்த நிலையில் அது கிடைக்காததால் கூட அவர் இவ்வாறு பேசி இருக்கலாம் என கூறி உள்ளார். ஜெயா பச்சன் கருத்து தெரிவித்த அன்று இரவு அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் ஷாருக்கானின் வீட்டிற்கு நேரடியாகவே மன்னிப்பு கேட்க சென்றார்களாம். அப்போது ஷாருக்கானின் மனைவி கெளரி தான் அவர்களை வரவேற்று, வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். ஆனால், ஷாருக்கான் அவர்களை சந்திக்கவே இல்லையாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி