சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் நீல்நிதின். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இதில், கத்தி கதை இந்தியில் ரீமேக் செய்யப்பட்டால் அதில் நடிக்க சல்மான்கான் அல்லது அமீர்கான் பொருத்தமாக இருப்பார்கள். மாஸ் ஹீரோ வேண்டும் என்றால் இவர்கள் இருவரில் யாரை வேண்டுமானாலும் நடிக்க வைக்கலாம். மேலும் சமந்தா ரோலில் தீபிகா படுகோன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி