சென்னை:-விஜய்–அஜித் ரசிகர்கள் தான் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் சண்டைகளில் ஈடுபடுவார்கள். ஆனால், இந்த இண்டர்நெட் சண்டை தற்போது ரஜினி-கமல் ரசிகர்கள் மூலம் ரோடு வரை வந்துள்ளது.
கமல் பிறந்தநாளை முன்னிட்டு பெரும்பாலான இடங்களில் அவருக்கு வாழ்த்து போஸ்டர்கள் அடிக்கப்பட்டுள்ளது. இதில் சில நாட்களுக்கு முன் ‘நடிகர்களின் முதல்வன்’ என்ற போஸ்டர் ரஜினி ரசிகர்களை கடுப்பேற்றியது. இந்த போஸ்டர்கள் பல இடங்களில் கிழிக்கப்பட்டுள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி