சென்னை:-அண்மையில் இயக்குனர் சங்கம் சார்பில் ஒரு விழா நடைபெற்றது. அப்போது விழாவில் பேசிய ராதா ரவி, லிங்குசாமியிடம் ஏன் இப்படி லீன் ஆகிவிட்டீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை நான் உடம்பை குறைக்கிறேன் என்றார்.
நானும் அவரிடம் உடம்பை நீ குறைக்கிறாயா அல்லது உனது படங்கள் உன்னை குறைக்கிறதா என்று கேட்டேன், அதற்கு அவர் பிறகு பேசலாம் என்று சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார். இதற்கு பதில் கூறும் வகையில் லிங்குசாமி பேசுகையில், பல இயக்குனர்கள் ஒல்லியாக இருந்து தான் சாதித்து இருக்கிறார்கள். நீங்கள் இப்படி குண்டாக இருப்பதால் தான் கழுத்து வலி என்று மருத்துவமனைக்கு செல்கிறீர்கள் என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி