சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் அடுத்து சிம்பு தேவன் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா ஆகியோர் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர்.
மேலும் இப்படத்தில் ஸ்ரீதேவி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கும் இப்படத்தை பற்றி ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கத்தி படத்தை தொடர்ந்து விஜய் இப்படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய். அப்பா வேடத்திற்கு ஜோடியாக ஸ்ரீதேவியும், மகன் வேடத்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கவிருக்கிறார்களாம். தற்போது இப்படத்திற்காக சென்னை ஈசிஆர் ரோட்டில் பிரம்மாண்ட அரண்மனை செட் ஒன்று போடப்பட்டு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி