லண்டன்:-1924 ஆம் ஆண்டு தேம்ஸ் பகுதியில் கட்டப்பட்ட வீட்டில் அமானுஷ்ய நிகழ்வுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இது தொடர்பான ஆய்வு மேற்கொண்டுவரும் மைக்கல் மொரிஸ் எனும் பெண் அந்த வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வீட்டில் விளக்கமுடியாத செயல்கள் மற்றும் சத்தங்கள் கேட்டதாகவும், வீட்டை படமெடுத்தபோது பெண் ஒருவரின் உருவம் புகைப்படத்தில் பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் பல ஆண்டுகளுக்கு முன் இருந்த பெண் தான் கவனித்துவந்த குழந்தை உயிரிழந்ததை அடுத்து குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் இறந்தபிறகு பேயாக இதே வீட்டில் இருந்து வருவதாகவும் கருதப்படுகிறது. இதனால், அந்த புகைப்படத்தில் பதிவாகியிருக்கும் பெண்ணின் உருவம் இறந்த பெண்ணுடையதாக இருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மைக்கல் மொரிஸ் தெரிவிக்கையில், அமானுஷ்ய நிகழ்வுகள் குறித்து ஆய்வுகளில் ஈடுபடுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இப்போது கிடைத்திருக்கும் புகைப்படம் அதனை இன்னும் பயனுள்ளதாக்கியுள்ளது எனக் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி