டோக்கியோ:-ஜப்பானில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் எலியின் திசுக்களில் உள்ள நிறத்தை அகற்றி அதன் தோல் வழியாக உடல் உறுப்புகளை பார்க்கும் வகையில் ஒரு செயல்முறையை உருவாக்கி வருகின்றனர். இந்த செயல்முறையின் உதவியோடு ஆய்வுகள் மேற்கொள்ளும்போது விலங்கின் உடலை அறுக்காமலேயே முப்பரிமாண முறையில் உடலின் செயல்பாடுகள் குறித்து அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறையில், எலியின் இரத்த ஓட்டம் நிறுத்தப்பட்டு, ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கும் ஹேம் வெளியேற்றப்படுகிறது. அதன்பின் எலி ஒரு ரசாயன திரவத்தில் இரண்டு நாட்கள் வைக்கப்பட்டு, திசுக்களில் இருந்து நிறங்கள் அகற்றப்படுகிறது.
செல்களில் புற்றுநோய் எவ்வாறு உருவாகி வளர்கிறது? என்பதை கண்டுபிடிக்கும் ஆய்வுக்கு இந்த முறையை பயன்படுத்த முடியும் என்று ஆய்வுக்குழு தலைவர் தெரிவித்தார். ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், டோக்கியோ பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ள இந்த ஆய்வு, உயிரோடு இருக்கும் விலங்குகளிடம் பரிசோதிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி