அதனால் அவரது நடனத்திற்கு மட்டுமே ரசிகர்கள் லைக் கொடுத்து வந்திருக்கிறார்கள். ஆனால், தமிழில் நடித்த படங்களில் அவருக்கு கூடுதலான வசன காட்சிகளும் கொடுக்கப்பட்டதால் பெருவாரியான ரசிகர்கள் சமந்தாவின் நடிப்பு குறித்து உச் கொட்டி வருகிறார்களாம். அந்த வகையில், அஞ்சான் வெற்றி பெறாதபோதும் சமந்தாவின் பிகினி கலந்த நடிப்புக்கு இளவட்ட ரசிகர்கள் ஏகப்பட்ட மார்க் கொடுத்து வருகிறார்களாம். அதிலும் விஜய்யுடன் நடித்துள்ள கத்தி படத்தில் அவரது நடிப்பையும், விஜயுடனான ஜோடிப் பொருத்தத்தையும் பெருமையாக சொல்லி கொண்டாடுகிறார்களாம்.
அந்த வகையில், சமந்தாவின் இணையதள பக்கத்திற்குள் செல்லும் விஜய் ரசிகர்கள், இந்த ஒரு படத்தோடு நிறுத்திக் கொள்ளக்கூடாது. எங்கள் தளபதியுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும் சொல்லி சமந்தாவை உசுப்பேற்றி விடுகிறார்களாம். அதனால் விஜய் நடிக்கும் மாரீசன் படத்துக்கு ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோரும், அட்லி இயக்கும் படத்திற்கு நயன்தாராவும் கமிட்டாகி விட்ட நிலையில், அதற்கடுத்து சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிப்பதற்கான முயற்சியை இப்போதே முடுக்கி விட்டிருக்கிறாராம் சமந்தா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி