இந்த புதிய திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் இருந்தும் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வரும் அழைப்புகள் இலவசமாக்கப்பட்டுள்ளது. இதற்காக 7 நாட்களுக்கு ரூ.33–க்கு ஸ்பெஷல் டேரிப் வவுச்சர் ரீசார்ஜ் செய்ய வேண்டும். வெளிமாநிலம் செல்பவர்கள் இந்த வவுச்சரை பயன்படுத்தினால் அவர்களுக்கு வரும் அழைப்புகளுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.
அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் டெல்லி, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட எந்த மாநிலத்திற்கு சென்றாலும் ரோமிங் கட்டணம் முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வெளிமாநிலத்தில் இருந்து தொடர்பு கொண்டு பேசுவதற்கான கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. நொடிக்கு ஒரு ரூபாய் ஐந்து பைசா வசூலிக்கப்படும். இது குறித்து பி.எஸ்.என்.எல். இயக்குனர் அனுபம் ஸ்ரீவத்சவா கூறுகையில், தேசிய அளவிலான இலவச ரோமிங் வசதி அனைத்து பி.எஸ்.என்.எல்., ஜி.எஸ்.எம். செல்போன் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும். ஸ்பெஷல் டேரிப் வவுச்சர்கள் 90 நாட்கள் வரை கிடைக்கும். இந்த திட்டம் நவம்பர் 1ம் தேதி முதல் 2015 – ஜனவரி 29ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி