பாடலை ஒலிப்பதிவு செய்து விட்டாலும், கடைசி நேர பரபரப்பில் படத்தை வெளியிட்டால் போதும், அந்தப் பாடல் எதற்கு என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கேட்டார்களாம். இருந்தாலும் அந்தப் படத்தில் அப்போது உதவி இயக்குனராகப் பணிபுரிந்த பிரபாகர் என்பவர்தான் விடாப்பிடியாக இருந்து படத்தில் அந்தப் பாடலை கண்டிப்பாக சேர்த்தே ஆக வேண்டும் என படத்தின் இயக்குனர் சுப்பிரமணிய சிவாவிடம் உறுதியாக இருந்தாராம். அதோடு, அது சம்பந்தமாக தயாரிப்பாளரிமும் பேசி அந்தப் பாடலை கடைசி நேரத்தில் படமாக்க வைத்துவிட்டாராம். அப்படி கடைசி நேரத்தில் எடுத்து சேர்க்கப்பட்ட பாடல்தான் படத்திற்கே திருப்புமுனையாக அமைந்து அந்தப் படத்தை மாபெரும் வெற்றி பெற வைத்தது.
அந்த உதவி இயக்குனர் பிரபாகர், இப்போது சூரியபிரபாகர் என்ற பெயரில் இயக்குனராக அறிமுகமாகும் ஓம் சாந்தி ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் அந்த மன்மத ராசா பாடலின் ஹிட்டுக்குப் பின்னால் இருக்கும் ஹிஸ்டரியைப் பற்றி திருடா திருடி படத்தின் இயக்குனர் சுப்பிரமணிய சிவா தெரிவித்தார். ஒரு ஐந்து நிமிடப் பாடல்தான் அன்று பல கோடிகளை அள்ள உதவியாக இருந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி