சென்னை:-சமீபத்தில் கே.வி.ஆனந்த் ஒரு பிரபல நாளிதழில் அனேகன் படத்தை பற்றி பேட்டி கொடுத்திருந்தார். அப்பேட்டியில் அனேகன் படத்தின் கதை முதன்முதலில் விஜய்க்கு தான் சொன்னேன். அவருக்கு கதை பிடித்து போக, இருந்தாலும் என்னால் இப்போதைக்கு பண்ண முடியாது, அதுவும் கால ஆவகாசம் நிறைந்த படமாக தெரிகிறது என்றார் .
சரி என்ன பண்ணலாம் என்று நினைக்கும் போத ஏன் நீங்கள் தனுஷ் வைத்து பண்ண கூடாது , இந்த கதை தனுஷ்க்கு சரியாக இருக்கும் அவரை வைத்து பண்ணுங்க ரொம்ப சூப்பரா வரும் என்று சொன்னார். அவர் சொன்ன படி நான் நடந்ததால் இன்று அனேகன் படத்தை பார்க்கும் போது தனுஷின் நடிப்பு வியக்கதக்க அளவுக்கு வந்து இருக்கிறது. எனக்கு தெரிந்து கமல்ஹாசனுக்கு பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் பின்னி பெடல் எடுக்கிறார். அனேகன் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும் என்று தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி