செய்திகள்,திரையுலகம் இறுதி நாள் படப்பிடிப்பில் ‘வாலு’ திரைப்படம்!…

இறுதி நாள் படப்பிடிப்பில் ‘வாலு’ திரைப்படம்!…

இறுதி நாள் படப்பிடிப்பில் ‘வாலு’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வாலு’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.இப்படத்தில் நடிக்கும் போது சிம்புவுக்கும் ஹன்சிகாவிற்கும் காதல் ஏற்பட்டது. இதனை இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

சில வாரங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் காதலை முறித்து விட்டதாக அறிவித்தனர். இதனால் ‘வாலு’ படம் சிறிது காலம் முடிவடையாமல் நின்றது. படத்தில் நடிக்க ஹன்சிகா மறுத்து வந்ததாகவும், தயாரிப்பாளரிடம் சிறு பிரச்சனை என்றும் செய்திகள் வெளியாகின. அதன்பிறகு இந்தப் பிரச்சினைகள் எல்லாம் சுமூகமாக முடிந்து படப்பிடிப்பை தொடங்க ஆரம்பித்தனர். தற்போது இன்று ‘வாலு’ படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கூடிய விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி