செய்திகள்,முதன்மை செய்திகள் ஓடுபாதையில் எருமை மீது மோதிய ஸ்பைஸ்ஜெட் விமானம்!…

ஓடுபாதையில் எருமை மீது மோதிய ஸ்பைஸ்ஜெட் விமானம்!…

ஓடுபாதையில் எருமை மீது மோதிய ஸ்பைஸ்ஜெட் விமானம்!… post thumbnail image
சூரத்:-குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்திலிருந்து எஸ்.ஜி. 662 என்ற விமானம், நேற்று மாலை 7 மணிக்கு டெல்லி புறப்பட்டது. 140 பயணிகளுடன் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த இந்த விமானம் திடீரென அங்கிருந்த எருமை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் வெளியேற்றப்பட்டு வேறொரு விமானத்தில் டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரிவித்த விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் சித்தார்த் குமார், சூரத் விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் எருமை மீது மோதியது. இந்த விபத்தால் பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி